பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 117 -}. மேவும் எனதாட்சி - அந்த விண்ணுல காட்சியேயாம்; ஏவல் இடம்பொருளில் - எனக்கிங்கு ஏதும் மயக்கமில்லை” (14) என்னும்இப் பொன்னுரைகள் - நாட்டில் எங்கும் எடுத்துரைத்தான்; மன்னுயிர் காத்திடவே - மண்ணில் வந்து பிறந்தமகன் (15) அனைத்துப் பாடல்களும் படித்து, அநுபவித்து மகிழ வேண்டியவை. மகாத்மா காந்தி: "கத்தியின்றி இரத்தமின்றி வெள்ளைய ரிடமிருந்து நாட்டின் விடுதலை பெற்றுத் தந்தவர். இவ ரைப்பற்றி ஏழு பாடல்கள் பாடியுள்ளார் கவிமணி. இவை யாவும் இரங்கற்பாக்கள். திடம்படைத்த கல்நெஞ்சும் திடுக்கிட்டு நடுநடுங்கிச் சிதறிப் போக மடம்படைத்த மாபாவி வஞ்சனையால் காந்திமகான் மடியச் சுட்டான்; உடம்பனைத்தும் வாயாக அழுதாலும் உறுதுயரம் ஒழிந்தி டாதால்: இடம்படைத்த உலகாளும் இறையேநீ எங்கொழிந்தாய் இந்நாள் ஐயா! (1) புத்த முனியும் புனிதஅரிச் சந்திரனும் உத்தமன் ஏசுவும் ஒன்றானோன் - மெய்த்தவத்தோர் வந்தனைசெய் காந்திமகான் வாய்மலரும் பொன்மொழியை எந்தநாள் கேட்போம் இனி (2) 6. ம.மா. சரமகவி - மகாத்மா காந்தியடிகள்