பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 128 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நூல்களை அருளிய பெருமாட்டி நம் ஒளவைப் பாட்டி. இவர் தவிர சங்க காலத்தில் வாழ்ந்து அதியமான் தந்த அருநெல்லிக்கனியுண்டு நீடு வாழ்ந்த ஒளவையார் என்ற பெரும் புலவர் ஒருவரும் உண்டு. அரசர்கட்கு அறநெறி களை உணர்த்தியும், முரண்படு முடி வேந்தர்களிடையே நட்பை வளர்த்தும், மார்பு நெறித்து (ஆணவத்துடன்) போர்முரசம் கொட்டுபவர்களிடையே சந்து செய்வித்தும் வாழ்ந்த பெருமாட்டி இவர். இவர்களைத் தவிர கம்பர் காலத்து வாழ்ந்த ஒளவையாரும் உளர். இவர்களையெல் லாம் நினைவுகூரும் வகையில் மூன்று பாடல்களை அருளி யுள்ளார் நம் கவிமணி. ஒளவைக் கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் பழங்கிழவி (1) நெல்லிக் கனியைத் தின்றுலகில் நீடு வாழும் தமிழ்க்கிழவி வெல்லற் கரிய மாந்தரெல்லாம் வியந்து போற்றும் ஒருகிழவி (2) கூழுக் காகக் கவிபாடும் கூனக் கிழவி; அவளுரையை வாழும் வாழ்வில் ஒருநாளும் மறவோம் மறவோம் மறவோமே! (3) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கேரளம் தமிழுக்குத் தந்த ஒப்புயர்வற்ற ஒரு மாமணி. ஆலப்புழையில் தோன்றி (ஏப்ரல் 4,1855) அனந்தபுரத்தில் (ஏப்பிரல் 25, 1897) மறைந்தவர். 42 ஆண்டுகளே தமிழ் கூறு நல்லுலகில் நடமாடி நற்றொண்டு புரிந்து நற்புகழ் ஈட்டியவர். இவர் இயற்றிய'மனோன்மணியம் என்னும் அற்புத நாடகம் தமிழ்