பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 13篡 + சிந்தை கவரும் சிவகாமி நற்சரிதம் செந்தமிழில் சுந்தரன் செய்ததனால் - முந்தவரு மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென் றேனவரும் சாலப் புகழ்ந்திடவே தான். (10) தாகூர்: இப்பெருமகன் வங்கம் ஈன்ற தவப்புதல்வன். “கீதாஞ்சலி யை வங்க மொழியில் இயற்றி, அதை மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகப் புகழ்பெற்றவர். இந்த நூல் நோபல் பரிசைப் பெற்றது; பரிசுக்குப் பெருமை சேர்த்தது. சாந்தி நிகேதன் பல்கலைக் கழகம் கண்ட பெருமை இவரைச் சேர்ந்தது. இப்பல்கலைக் கழகத்தில் 1981-இல் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டுக் கருத்தரங் கில் நானும் என் அருமை மனாக்கர் டாக்டர் என்.கடிகாச லமும் (உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்), என் அருமை நண்பர் வழக்கறிஞர் பா.அரங்கசாமி ரெட்டியாரும் கலந்து கொண்டோம். தாகூரை நினைவுகூரும் வகையில் தனியே நிறுவப் பெற்றுள்ள நூலகம், அருங்காட்சியகம் முதலிய வற்றைக் கண்டு களித்தோம். இந்தப் பெரியாரைப் பற்றிக் கவிமணியின் ஒரே பாடல்:" அலை வளைத்த புவிமுழுதும் அளந்தபெரும் புகழுடையான் அரசர் கண்டு தலைவளைத்து வணங்குமொரு குருதேவன் சலியாது தரணி மீது கலைவளர்த்த கவியரசன் தாகூரின் றெம்மையெல்லாம் கைவிட்டு, ஐயோ! மலைவிளக்கு மறைந்ததென மறைந்திட்டான் என்னே.இம் மனித வாழ்க்கை: திரு. பா.அரங்கசாமி ரெட்டியார் இன்றில்லை; திருநாடு அலங்கரித்து விட்டார். 21. ம.மா. தாகூர் இரங்கற்பா