பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 鱼33 + வல்லார் அறிஞர் செல்வரறம் வளர்க்கும் ஈழ வளநாட்டான், நல்லார் போற்றும் ஆறுமுக நாவ லன்பேர் மறவோமே. (3) பாரதியார்": இவர் பிறவியிலேயே சுதந்திரமான மனப் பான்மையுடைய கவிஞர். சுதந்திரத்தைத் தெய்வமாக வழி பட்டுப் பாடிய கவிஞர். அவர் சமுதாய நன்மைக்காகப் பாடப் பெற்ற பாடல்கள் இன்றும் உணர்ச்சி மிகுந்த கவிதைகளாகப் பாடிப் போற்றப் பெறுகின்றன. இப்பெரு மானைப்பற்றி ஒரே பாடல் உள்ளது. ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம் ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன், ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன், அமரகவி என்றெவரும் புகழப் பெற்றோன் சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால் தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே. என்பது காண்க. உ.வே.சாமி நாதய்யர்: தமிழ்த் தாத்தா என்று செல்ல மாக வழங்கப் பெறும் உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் அடங்கிக் கிடந்த பண்டைய இலக்கியங்களை அச்சுக்குக் கொணர்ந்து ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அழகாக வெளி யிட்டு உதவிய பெருமகனார். இவரைப்பற்றி மூன்று பாடல்கள் உள்ளன.” 22. ம.மா. அமரகவி 23. ம.மா. தமிழ் முனி