பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 143 + கப்பலை ஒட்டிக் கடுங்காவற் காளாகி உப்பிலாக் கூழ்உண் டுடல்மெலிந்தோன் ஒப்பிலாத் தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின் நன்னாமம் வாழ்த்துகஎன் நா (3) சரோஜினி தேவி': இந்த அம்மையார் தேசிய நீரோட் டத்தில் பெரும் பங்கு கொண்டவர். சிறந்த ஆங்கிலக் கவிஞர். உலகப் புகழ்பெற்றவர். இவரை Nightingale of india இந்தியாவின் வானம்பாடி என்று புகழ்ந்து கூறுவதுண்டு. இவரைப் பற்றி நான்கு பாடல்கள் உள்ளன. காந்தி திருவடியோ? கற்பகமோ? வானியமுது ஏந்தும் எழிற்கரமோ? யாரறிவார்? - ஆர்ந்தபுகழ் மங்கை சரோஜினியாம் வண்ணக் கிளி.இன்று தங்கி யிருக்குமிடம் தான் (1) பைங்கிளிவா வாவென்று பங்கயச் செல்வியுனை அங்கைகள் நீட்டி அழைத்தாளோ? - பொங்குபுகழ் மங்கை சரோஜினிநீ வானுலக வாழ்வுபெற இங்கிருந் தேகினாய் இன்று (2) வெட்டி முறித்த விறகெனவோர் வீணையினைச் சுட்டெரித்த பாவியென்று தூற்றாதோ? - சிட்டர்புகழ் அன்னை சரோஜினியின் ஆவியுண்ட கூற்றமே! உன்னையினி என்றும் உலகு. (3) பைங்கிளியாய்த் தேன்கலந்த பாலமுதம் உண்டுமையாள் அங்கையிலே தங்கியுரை யாடுதற்கோ? - இங்கிருந்து மாதரசி நன்மதுர வாணி சரோஜினிநீ மீதெழுந்து சென்றாய் விரைந்து (4) 37. ம.மா. சரமகவி - சரோஜினிதேவி