பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 斗 145 + தொரு சமயம் வங்க நாட்டு ஆளுநராகப் பணியாற்றியவர். காங்கிரசுக்கு எதிராகச் சுதந்திராக் கட்சியைத் தோற்றுவித்த வர். உண்மையான காங்கிரசுத் தொண்டர். மறையும்போது இவர் சுதந்திரா கட்சியினராக மறைந்தார். தந்தை பெரியா ரின் நெருக்கமான நண்பர். இவரை ஓர் அரசியல் ஞானி என்று சொல்லாம். சக்கரவர்த்தித் திருமகன் வியாசர் விருந்து இவரை நினைவு கூரச் செய்யும் நூல்கள். தன் மனத்திற்குத் தவறு எனப் பட்டபோது கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தயங்குவதில்லை. இவரைப்பற்றி வாழ்த்தாக ஆறு பாடல்கள் உள்ளன. அன்னை யடிமை நிலைபோக்கி அறப்போர் வெற்றித் தளபதியாய் மன்னும் காந்தி யடிகளுக்கு வலக்கை யாக நின்றுதவி சென்னை மக்கள் புகழ்வளர்த்த செல்வா! ராஜ கோபாலா! இன்னும் பல்லாண் டிவ்வுலகில் இனிது வாழ்க! வாழ்கவே! (1) இனிய கனிகள் கையிலெடுத்து எளியேன் இருக்கும் இடந்தேடி, கனியும் அன்பால் வந்துள்ளம் கனியச் செய்த கனவானே! புனித ஞானி என்றுலகம் புகழும் ராஜ கோபாலா! நனி.எம் பெருமான் அருளால்எந் நாளும் வாழ்க! வாழ்கவே! (2)