பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 163 * நல்கி வீட்டை இன்னகை ஒளி செய்பவளும் பெண்ணே {11}. இத்தகைய பெரிய நற்செயல்கள் எல்லாம் மகளிருக்கு ஈசன் அளித்த உரிமைகள். இவை தவிர அவர்கட்கு வேறு ஏதேனும் தெய்வப் பணி உண்டோ? ஈசனிடம் பெறும் வேறு வரமும் உண்டோ? (12). மங்கையராகப் பிறந்தத னால் அவர்கள் மனம் வாடித் தளர வேண்டா; அவர்கள் தரணியில் நிற்கும் கற்பகத் தருவாய் நிற்பவர்கள். இத்த கைய திருப்பணிகளையெல்லாம் செய்யும் திருக்குணங்க ளையுடையவராதலால், அவர்கட்கு முக்தி உறுதி என்கின் றார் கவிமணி. இதனால் சமுதாய நலம் பேணுபவர்களில் சிறந்தவர்கள் மங்கையரேயாவர். தீண்டாமை : சமூகநலத்திற்குப் பங்கம் விளைவிக் கும் நோய் இது. கவிமணி இதனைப் பேயாக வருணிப்பர். பண்டை நாள்தொட்டு இன்றுவரை இருந்து கொண்டு. பாரத நாட்டைப் பாழ்படுத்தி வருகின்ற பேய்; சண்டைகள் மூட்டிடும் பேய். இதனைச் சாத்திரிமார் பூசை செய்து வளர்த்து வருகின்றதாகக் கவிமணி கூறுவார்(2). கண்ணிலே காணும்பேய், ஐயா! - இது காலும் நிலத்தில் பதியும்பேய், ஐயா நிண்ணய மில்லாப் பேய்ஐயா! - நடு நீதிநெறி காணா நீசப் பேய்,ஐயா! (4) வேதக் கடலைக் கலக்கும் - அதில் வேண்டும் விதிவலை வீசிப் பிடிக்கும்; சாதிப் பிளவை உண்டாக்கும் எங்கும் "சண்டாளர் சண்டாளர் என்றே முழங்கும் (8) & 10. ம.மா. சமூகம் - தீண்டாமைப் பேய்