பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 165 * g நல்ல கிண்டல், தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர் குலப் பெண்ணை மணந்து கொண்டதை நினையா மலே, அந்த இறைவனுக்குப் பூசை புரியும் பட்டர் தீட்டைப் பற்றிப் பேசுகின்றார். தீண்டாமையின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசும் போக்கில் அதனைத் தோலுரித்துக் காட்டுகின்றார் கவிஞர். கூடியிருக்க வொட்டாது - நண்பர் கொண்டு தருவதை உண்ணவொட்டாது; தேடி வருவோரை அன்பாய் - வீட்டுத் திண்ணையில் வைக்க வொட்டாது (10) தாகித்து வந்தவருக்குச் - செம்பில் தண்ணி அளித்திடச் சம்மதியாது; சோகித்து வீழ்வோரைக் கண்டால் - தலை தூக்கி வியர்வை துடைக்க வொட்டாது (11) கண்ணுதல் ஆலயம் சென்றால் - அங்கே கையிற் பிரசாதம் போடவொட்டாது எண்ணி வரையளந்திட்டே - அதற்கு இப்புறம் அப்புறம் வில்லென் தட்டும் (12) ஆனால் இந்தப் பேய் அடங்கிக் கிடக்கும் இடங்களும் உண்டு. கப்பலில் ஏறிட அஞ்சும் - சில காப்பிக் கடைஎட்டிப் பார்க்கவும் நாணும்; செப்பும் புகைவண்டி யுள்ளே - அது சீற்றம் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் (13) (புகைவண்டி - இருப்பூர்தி)