பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 194 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இராமாயணத்தைக் குறித்து, பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன் பாரிற் பொழிந்ததம் பாற்கடலை (2) என்று போற்றுவார்; சிலப்பதிகாரத்தைக் குறித்து, தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேடும் சிலப்பதிகா ரத்தை (3) என்று புகழ்வார். கலித்தொகையைக் குறித்து, கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்ப கற்பனை சேரும் களஞ்சியத்தை (4) என்று பாராட்டுவார். இலக்கியக் கல்வியாலன்றியே பிற வழிகளாலும் நம் மக்கள் இகவாழ்க்கையில் மேம்பட்டு விளங்க வேண்டும் என்று கருதி வேறுபல பாடல்களும் பாடியுள்ளார் நம் கவிமணி. வையமும் வாழ்வும் என்ற பகுதியிலுள்ள பாடல்கள் பலவும் இத்தகையனவே. பறவை வாழ்வில்: மரங்களில் தங்கி ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டிருக்கும் பறவையின் வாழ்க்கையைக் கண்டு அதனினின்றும் சில படிப்பினைகளை வழங்குவார். இவை யாவும் மனிதப் பண்பினைப் பற்றியனவாகவே இருக்கும். பறந்து பறந்தெங்கும் - திரியும் பறவை வாழ்வினைப் போல் சிறந்த வாழ்வேதும் - இந்தச் செகத்தில் கண்டதுண்டோ? (1)* 3. ம.மா. வையமும் வாழ்வும் - இயற்கை வாழ்வு