பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 196 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நமனை எண்ணியெண்ணி - உள்ளம் நடுந டுங்கிடாமல், அமைதி காணலாம் நித்திய ஆனந்தம் பெற்றிடலாம் (22) ஒர்ந்து சிந்தித்தால் இவை யாவும் மக்கட் பண்புக் கோட் பாடு என்பது தெளிவாகும். குரு வழங்கிய ஞானச்செல்வம்'. குரு வழங்கியனவாக கவிமணி சிலவற்றை அருளுகின்றார். வாக்கி றந்தபொருள் - நமது மனத்திற் கெட்டாப் பொருள்; யார்க்கும் அப்பொருளை - அளக்க இயலமாட்டா தப்பா: (1) 'அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருக் கும் இறைவனை எப்பொழுதும் சிந்தையில் இருத்த வேண்டும் என்பது குறிப்பு. 'ஆதி எது?'என்று - வினவும் அவன்ஒர் அறிவிலான்; 'ஆதி இது என்று கூறும் அவனும் ஒருமூடன்! (3) என்பது நமக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை. 'பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் பிறப்பர் என்பது ஒருவகை நியதி. இஃது அவரவர் செய்த வினையின் பயனாகும். இந்தப் பேருண்மையினை, மண்ணில் வாழ்வதுண்டு - பின்னால் மரணமாவ துண்டு; நண்ணும் இன்பதுன்பம் - எந்த நாளும் உண்டப்பா! (4) என்று உணர்த்துவார். 4. ம.மா. மேலது குருவின் உபதேசம்