பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை எளியவர்.பால் இரக்க நெஞ்சம் கொண்டவர். தொழிலின் பெருமையைக் கூறுமிடத்து, வாழ வேண்டுமெனில் - தொழில்கள் வளர வேண்டு மையா ஏழை யென்றொருவன் - உலகில் இருக்க லாகா தையா' என்ற கூற்று இதனை உறுதிப்படுத்துகின்றது. இந்த ஏழ்மை நிலையால் விளையுறும் துன்பங்களை, நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்" என்ற குறளால் வள்ளுவர் பெருமானும் விளக்கிப் போந் தார். பல்வகைத் துன்பங்களை, "துன்பமும் தானும் உடனே நிகழ்தலின், நல்குரவைத் துன்பமாக்கியும், அத் துன்பம் அடியாகச் செல்வர் கடைநோக்கிச் சேறல் துன்ப மும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறா வழியும் அவர் கொடுத்தது வாங்குந் துன்பமும், அது கொடு வந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாடோறும் வேறு வேறாக வருத லின் எல்லாத் துன்பங்களும் உளவாம்' என்று விளக்குவர் பரிமேலழகர். இங்ங்னமாக இவர்தம் மக்கட் பண்பாட்டுக் கோட்பாடு ஒருவாறு விளக்கப் பெற்றது. 13. ம.மா. சமூகம் - தொழிலாளர் முறையீடு! 14. திருக்குள் - நல்குரவு - 5