பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 237 -j வக்கா லத்து வகைக்கொரு பீசு எழுதப் பீசு சொல்லப் பீசு எழுதிய தாளை எடுக்கப் பீசு நிற்கப் பீசு இருக்கப் பீசு நீட்டின கையை மடக்கப் பீசு பாரப் பீக கீரப் பீசு பரா இழவுப் பயிற்றுப் பீசு கண்டு பீசு காணாப் பீசு முண்டு துணிக்கொரு முழுமல் பீசு அந்தப் பீசு இந்தப் பீசு ஆனைப் பீசு பூனைப் பீசு ஏறப் பீசு இறங்கப் பீசு இப்படி யாக என்றென் றைக்கும் பீசு பீசாகப் பிச்சுப் பிடுங்கும் கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டா குதித்துக் குடியை முடித்திட வேண்டா என்ற பகுதியில் ஒரு பட்டியலையே தருகின்றார் வெள் ளையம் பிள்ளை. வாதி வக்கில் அண்டப் புரட்டனைப்பற்றிக் கூறுவது: வாதிப் பக்கத்து வக்கீல் உம்மைக் கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க் கிராசு கேட்டு கிடுக்கி விடுவான்; சந்தேக மில்லை சந்தேக மில்லை; நீர், அண்டப் புரட்டனை அறிய மாட்டீர், புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்; ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்; சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்; ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்; பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்