பாடலில் படிமங்கள் + 243 - பயன்படுத்தப் பெறுகின்றன. பள்ளிகளில் சுற்றுலா அமைத்து மாணாக்கர்களைப் பல்வேறு இடங்கட்கு இட் டுச் சென்று பல்வேறு காட்சிகளை நேரில் காணச் செய்கின் றனர். கவிமணியின் பாசுரங்களில் கட்புலனைக் கவரும் ஒரு சில படிமங்களைக் கண்டு மகிழ்வோம். நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் {1} இது கலைமகள் வணக்கப் பாடலின் பகுதி '. இதில் 'உழுவார் கரம், கவிவாணர் நா, அறிவாளர் நெஞ்சு கட்புலப் படிமங்கள். இன்னொரு காட்சி: ஓங்கா ரத்தோடு பணிகின்ற அடியாரின் உபய பதம் என்றனக்கிவ் உலகாளும் இறைவன் கவிக்குமொரு முடியினும் உயர்ந்ததிரு முடிகள், அம்மா! தேங்கா மரத்திலே மாங்காய் பறிக்கவொரு சினைமந்தி கொக்கை நோக்கும் (34) இஃது அழகம்மை ஆசிரிய விருத்தத்தில் ஒரு பகுதி. இதில் 'அடியாரின் உபய பதம்', 'உயர்ந்த திருவடிகள், தேங்கா மரம்', 'மாங்காய்', 'சினை மந்தி', 'கொக்கு இவை கட்புலப் படிமங்கள். கம்பனைப் பற்றிய பாடல்களில் ஒரு பாடலிலுள்ள படிமத்தைக் காண்போம். 1. பாடல்களில் குறிக்கப்படும் எண்கள் நூலின் பாடல்களில் குறிக்கப் பெற் னுள்ள எண்களாகும்.
பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/265
தோற்றம்