பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 252 + கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு கண்டின் சுவையெல்லாம் - சொல்லில் கனியைக் காட்டிடுவோன் (76) இது கம்பனைப் பற்றிய பாடல். இதில் கண்டின் சுவை சுவைப்புலப் படிமம். கற்கண்டு சீனி, கனியும் கனிந்தொழுகு சொற்கொண்டு எமக்குச் சுகமளிக்கும் பூங்குயிலோ? (209) தேவாரப் பாகும் திருவாசகத் தேனும் நாவார உண்ணளம்மான் நன்மகவாய் வந்தானோ? (218) இவை மழலை மொழி'யின் கீழ்வந்த தாலாட்டுப் பாடல் கள். இவற்றில் கற்கண்டு, சீனி, பாகு, தேன் ஆகிய இவை சுவைப்புலப் படிமங்கள். நாற்றப்புலப் படிமங்கள்: மூக்கினால் முகர்ந்து அநுபவிக் கக் கூடிய படிமங்களாக அமைந்திருப்பவை இவை: பூவாகி அப்பூப் பொருந்துவன மாகிஅப் பூவினுறு மணமுமாகிப் பூதமாய்ட புலனாய்ப் புறப்பாழுமாய் அப் புனாப்பைஅறி. விக்கும் அறிவாய் (27) இஃது அழகம்மை ஆசிரிய விருத்தம். இதில் மணம்' நாற்றப்புலப் படிமம். மண்டலம் எங்கும் கமழும் அருந்தமிழ் வாசம் நுகர்ந்து மகிழ்வோமே! (56) இலக்கியப் பஞ்சகத்தில் 'பத்துப் பாட்டு' பற்றியவை. இதில் அருந்தமிழ் வாசம்’ என்பது நாற்றப்புலப் படிமம்.