பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 258 + நினைவாற்றலின் காரணமாகக் கருத்து நிலைத் தூண்டல்க ளாக (ideational level) மாறுகின்றன. அவை மூளையிலுள்ள gšgsàr@ Thalamus), Gudögšžašr@ (Hypo - thalamus) srcirp பகுதிகளின் மூலமாகப் புலன்களை அடையும்போது மூளையில் அற்புதமாக அமைந்திருக்கும் நரம்பு அமைப்பு களைத் துண்ட, அந்நரம்புகளின் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands) போன்ற நாளமிலாச் சுரப்பிகளில் சாறுகளை ஊறச் செய்து குருதியோட்டத்தை மிகுவிக்இன் றன. உடலும் கிளர்ச்சியடைகின்றது. அப்போது கவிதைக ளில் வரும் படிமங்களைப் புலன்கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக்காட்சிகளை அதுப வித்து மகிழ்கின்றது. இத்தகைய முருகுணர்ச்சி கவிமணி யின் பாசுரங்களில் கவிதையநுபவமாகப் பரிணமிக்கின் றது. இந்தப் பாடல்களை நாம் பயிலுங்கால் அதே உணர்ச் சியை நாம் பயிற்சியால் பெற முடிகின்றது.