பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4- 260 <!- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இனி இவர்தம் கவிதைகளின் இயல்புகளைப் பற்றிச் சிறிது நோக்குவோம். கவிதையின் இயல்பை வரையறை செய்வதற்கு கவிதை இன்னது என்று விளக்குவதற்கு - சில நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் முயன்று வந்துள்ளனர். மேற்புல அறிஞர்களில் ஜான்சன் என்பார், 'கவிதை என்பது ஒலிநயம் (Rhythm) அமைந்து சொற்களின் கட்டுக்கோப்பு: அஃது இன்பத்தை உண்மை யுடன் இணைப்பது; அறிவுக்குத் துணையாகக் கற்பனை யைக் கொண்டிருப்பது' என்று கூறுவார். கார்லைல் என் பார் "இசைதழுவிய எண்ணமே கவிதை' என வரையறுப் பார். மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்ட வல்லதும் செம்மை நிறைந்ததுமான கூற்றே கவிதை யாகும்' என்பது மாத்யூ ஆர்னால்ட் என்பார் கவிதைக்குக் கூறும் இலக்கணம். இங்ஙனம் மேற்புல அறிஞர் கூறி யவை அனைத்தும் கவிதையின் இலக்கணத்தைத் திட்ட மாக வரையறுக்க இயலவில்லை. இனி, நம் நாட்டு அறிஞர்கள் மொழிவதையும் காண் போம். சீதாப் பிராட்டியின் அழகை வருணிக்கப் புகுந்த கம்பநாடன் பொன்னின் சோதி, போதின் நாற்றம், தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்த்து, ஒன்றில்கூட மனநிறைவு பெற முடியாமல், இறுதியாக, செஞ்சொற் கவிஇன்பம்' என்று கூறி மனநிறைவு பெறுகின்றான். ந்ன்னுரலாசிரிய ரும், பல்வகைத் தாதுவின், உயிர்க்(கு) உடல்போல்,பல சொல்லால் பொருட்(கு)இட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்" 1. கம்பரா.பாலகாண். மிதிலைக் காட்சி - 23 2. நன்னூல் - 268