பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 266 米、 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நவம்மிகப் பழமை பேசும் நயத்தினைப் புகழு வேனோ? கவிமணி யவரை வாழ்த்தக் காரணம் எதனைச் சொல்வேன்? (5) * என்று. இதில் அவர் கூற முடியாமல் தவிப்பதைக் காண லாம். காதல் பிறந்த கதை', கருணைக் கடல்", வெற்றி முதலியனவற்றை உண்மைக் கவிதைகள் என உரைக்கலாம். கால நதியின் கதியதனில் கடவுள் ஆணை யைக் காண்போமாயின் ஞாலமீது சுகமெல்லாம் நம்மை வந்து அடையும். நாமே நமக்குத் துணையானால் நாடும் பொருளும் நற்புகழும் தாமே நம்மைத் தேடிவரும். கவி மணியின் பாடல்களில் மீண்டும் மீண்டும் நம் மனம் ஆழங்கால் படும்போது நம் மனத்தில் புதியதோர் இன்பம் சுரக்கின்றது. அவற்றை நுகர நுகரத் தெவிட்டாத இன் பத்தை அடைகின்றோம். அவை என்றும் மாறாத இள மைத் தன்மையோடு நம் மனத்தைக் கவர்வனவாக உள் ளன. பல பாடல்கள் பல தலைமுறைகளாகத் தமிழ் மக்களை இன்புறுத்தி நிலவும் என்று உறுதி கூறலாம். சில பாடல்கள் என்றும் வாடாமலர்களாய் நின்று நிலவும் இனிய மணம் கமழ்ந்து தமிழன்னையின் திருவடிகளில் ஒளிரும் என்று கருதலாம். இவற்றையெல்லாம் கருதியே நாமக்கல் கவிஞர், கவிமணி பாரதியின் பாடல்களில் சுவைத்து மகிழ்ந்து 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கூறியதுபோல், தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பதுஎன் செவிப்பெருமை” 8. சிறப்புப் பாயிரங்கள் - நாமக்கல் கவிஞர் 9. ம.மா. சிறப்புப் பாயிரங்கள் - நாமக்கல் கவிஞர்