பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

啤,24 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இவை சேவற் கோழியைப் பற்றியவை. கோழி கோழி வாவா! கூரைவிட் டிறங்கிவன; கோழி முட்டை இடவ: கூட்டில்அடை காக்க வா. (4) பெட்டைக் கோழி வாவா! பிள்ளைகளைக் கூட்டிவா! குட்டை நெல்லைக் கொட்டினேன்; கொத்திக் கொத்தித் தின்னவா (5) வஞ்ச மாய்ப்ப ருந்து அதோ: வானில் வட்டம் போடுது குஞ்ச னைத்துக் காப்பாயோ? கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ? (6) இவை பெட்டைக் கோழியைப் பற்றியவை. பயிற்சி தந்தால் இவற்றைக் குழந்தைகள் ஆர்வமாய்ப் பாடும். இவற்றைக் கற்பிக்கும்போது சேவலுக்குக் கொண்டை உண்டு, அதுதான் விடியற்காலையில் கூவுவது, அதுதான் கோழிப் போரில் பங்கு கொள்ளுவது என்ற கருத்துகளும்; பெட்டைக் கோழிக்குக் கொண்டை இல்லை, அதுதான் முட்டையிட்டு அடை காக்கும், இரை தேடப் போகும் போது குஞ்சுகளைக் கூட்டிச் செல்லுவதும், பருந்தினால் தன் குஞ்சுகளுக்கு வரும் விபத்தை அதுவே காக்கும் என்ற கருத்துகளும் குழந்தைகளின் மனத்தில் ஆழப்பதியும். கிளியை அழைத்தல் பற்றி: இதுபற்றி ஏழு பாடல்கள் உள்ளன. "எல்லாமே குழந்தைகள் பாடுவதற்கு ஏற்றவை. அவற்றுள் சில: 12. மழலை மொழி - கிளியை அழைத்தல்