பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-#- 30 -#- கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு குயிலைத் தேடனோ? - கிளியொடு கொஞ்ச வாரானோ? மயிலை நோக்கானோ? - நம்மையெல்லாம் மறந்தும் போனானோ? (10) இனிய கதையெல்லாம் - அவனைப்போல் யாவர் சொல்வாரம்மா! கணியைச் செந்தேனை - இனி.எந்தக் காலம் காண்பேன், ஐயோ! (13) இதில் உள்ள பதின்மூன்று பாடல்களும் படித்து அநுப விக்கத் தக்கவை. 'மூன்று விஷயங்கள் என்ற தலைப்பில் உள்ள மூன்று பாடல்களும் உணர்ச்சிப் பிழம்பை எழுப்புபவை. கூவிப் பறக்கும்ஒரு - கிளியினைக் கூட்டில் அடைத்து வைத்தால் தேவர் உலகமெல்லாம் - அதுசினத் தீயை எழுப்பிடுமே! (1) மன்னிய சோலையிலே - ஒருகுயில் வாடி வருந்து மெனில் கின்னரர் கிம்புருடர் - தளர்ந்துதம் கீதம் இழப்பார் ஐயோ! (2) சிட்டுக் குருவிக்கேனும் - ஒருசிறு தீங்கினைச் செய்பவரை நட்டநல் நண்பராக - உலகமும் நம்பிக்கை கொள்வதுண்டோ! (3) குழந்தைகளின் கல்வி: இவ்விடத்தில் உளவியல் அடிப் படையில் அமைந்த குழந்தைக் கல்வி முறைகள் பற்றிய சில சொற்கள். மேனாட்டு அறிஞர்களில் ரூசோ, பெஸ்ட லாஸ்லி, ஃபிராபெல், மாண்டிசாரி போன்ற அறிஞர்கள் குழந்