பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் -j- 37 -4 முறைகள் இவரையும் பாதித்தன. இந்த முறைகளினால் இவர்தம் நாட்டுப் பற்று மேன்மேலும் கிளர்ந்தெழுந்தது. சுதந்திரப் பயிரை வளர்த்ததை, தண்ணிர்விட் டோவளர்த்தோம்! சர்வேசா, இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம் ! என்று குறிப்பிடுகின்றார். வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேரொன்று கொள்வாரோ?" என்று தம் தீவிர விடுதலை வேட்கையை வெளியிடுகின் றார். என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?" என்று இவர்தம் விடுதலை உணர்வு வெளிப்படுகின்றது. சுதந்திரத்தை தேவியாக உருவகித்துப் பாடல்கள் படைத் துள்ளார். தெய்வங்களைப பற்றிப் பாடிய போதிலும், பழைய பாரதக் கதைகளை எடுத்துக் கவிதை புனைந்த போதிலும், வேறு எந்தத் தலைப்பின்மீது பாரதியார் கவிதை இயற்றிய போதிலும் அவற்றில் எல்லாம் தேசபக்தி என்னும் அனல் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். விநாயகர் நான் மணி மாலைப் பாடும்போதுகூட, நமக்குத் தொழில்கவிதை நாட்டிற்கு உழைத்தல்" பா.க. தே.கீ. சுதந்திரப் பயிர் - மேலது - மேலது - சுதந்திரத்தின் பெருமை - 1 மேலது மேலது சுதந்திரத் தாகம் - 1 வி.நா.ம. 25