பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு -j & 参 総 புல்லும் பசுவிற்காம், பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம்; தொல்லுலகில் ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர் வாழும் வடிவேலா வா! {1} முத்தையா வேலா! முருகன் எனவோதும் சொத்தையே தேடிச் சுகமடைவீர் நித்தமிவ் டுேம் களமும் விளைநிலமும் தோப்புகளும் மாடும் சதமாகு மா? (2) இவை நெஞ்சை உருக்கும் பாடல்களாகும். குமரி பகவதி, சுசீந்திரம், இலக்குமி பற்றியும் பாடல் கள் உள்ளன. ஆனால், கலைமகள் பற்றியுள்ள, நடிப் புலங்கள் உழுவார் கரமும் தயவுரைகள் தேடிக் கொழிக்கும் சவிவாணர் நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்துதடம் ஆடிக் களிக்கும் மயிலே உன்பாதம் அடைக்கலமே." என்ற பாடல் குமரகுருபரரின் சகலகலாவல்லிப் பாடல் களையும் கம்பனின் சரசுவதி அந்தாதிப் பாடல்களையும் விஞ்சும் முறையில் அமைந்துள்ளது. 'அஞ்சலி என்ற தலைப்பிலுள்ள பன்னிரண்டு பாடல்க வில் முதல் மூன்று பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போல் அமைந்துள்ளன. ஏனையவை வேறு படிகளில் வார்க்கப் பெற்றுள்ளன. 18. டி.டின சகவதி துதி