பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 孝 59 卡 காய்சின மாகளிறு அன்னான்னன் கைபற்றி, தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழி!நான் (7) ஆண்டாள் பாசுரங்களைத் தானே நேரில் பாடியவை; கவிமணி மீராபாய் இந்தியில் பாடிய பாடல்களைத் தமி ழாக்கம் செய்தவை. கவிமணி அவற்றை ஆண்டாள் பாணி யில் அமைத்துள்ளமை ஒப்புநோக்கி மகிழத் தக்கது. திருமணச் சடங்குகளில் சிறிது வேறுபட்டுள்ளது. இரு வரும் கண்ணனையே தம் நாயகனாக வரித்துள்ளமை கருதத்தக்கது. ஆண்டாள், மீராபாய் ஆகிய இருவர் வாழ்க்கையிலும் ஒரு வேறுபாடு உண்டு. ஆண்டாள், மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில் லேன்' என்று கூறியவள், மற்றும், அன்றிப்பின் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால்." என்ற பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். ஆனால், மீராபாய் மோவாடா மகா ராணாவின் மூத்தமகன் போஜராஜனை மணந்து கொள்ளுகின்றாள். இல்லற வாழ்க்கை சுகப்பட வில்லை. அவள் கிரிதரனையே மணாளனாக வரிக்கின் றாள். கிரிதர கோபால விக்கிரகத்தையே இடைவிடாது வழிபட்டு வருகின்றாள்; அவன் புகழையே பாடியவண் ணம் அவள் காலம் கழிகின்றது. இப்படிப் பாடும் ஏழு பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை. 17. நாச்.திரு.1:5 18.