பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్టి, శ్రీ స్టీ கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஆவி பெற்றனனோ? இன்றும் அம்புவி வாழ்பவனோ? யாவர் அறிந்திடுவார் - அறிதினும் யாவரே கூறவல்லார்? (30) பாடல்கள் யாவும் பாமர மக்களும் படித்து நுகரும் வண்ணம் அமைத்திட்டார் கவிமணி. ஆசிய ஜோதி; இந்த நூல் ஆங்கில மொழியில் எட்வின் *iströG stairua; Light of Asia என்னும் பெயரில் வெளி யிட்ட நூலின் தமிழ் வடிவமே ஆகும். இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்வது பெயரளவில்தான். ஆனால், இதனை ஒரு நூதன படைப்பு என்றே சொல்ல வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நம் நாட்டில் தோன் றிய புத்தர் பெருமானின் வரலாற்றைக் கூறும் ஓர் அற்புத மான படைப்பு இது. புத்தர் பெருமானை, "பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே' என்று பாடிப் பாராட்டியுள்ளார் பாரதியார். இவருடைய பெருமை சீனா, ஜப்பான், பர்மா, சயாம், இலங்கை முதலிய வெளிநாடுகள் வரை சென்று பரவியுள்ளது. இன்றைய உலகில் புத்த சமயத்தைத் தழுவினவர்கள் அறுபது கோடிக்கு மேல் உள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தைப் படைத்த டாக்டர் அம்பேத்கர் கூட இச்சமயத் தின்பால் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவினார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஆசிய சோதியை பன்முறை பயின்று அதில் ஆழங் கால்பட்டு அதுபவித்தவன் அடியேன். புத்த கயைக்குச் 21. பா.க. தே.கீ. எங்கள் நாடு