பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 77 -}. உழுதவர் இந்நாள் உலகில் இல்லை; விதைத்தவர் அன்றே விண்ணுல கெய்தினர் காத்தவர் காலமும் கழிந்து விட்டது அடிமையும் இறந்துநாள் ஐந்தா றாகுது காலனை எவரே கடக்க வல்லவர்? (46–50) என்று மற்றோர் பேருண்மையினை மறைக் கூற்று போல் உரைத்தனள். இவ்வாறு தன் அநுபவத்தை கூறிய சுஜாதை, “ஐயமிடு மனைகளிலே மரணம் என்றும் அறியாத மனையேதும் இல்லை இல்லை; வையகத்தில் பிறப்புளதேல் இறப்பும் உண்டு; மாற்றரிய விதியிதுவென் றுணர்ந்து கொண்டேன்; கையமர்ந்த மகவினையும் கானில் இட்டேன்; கண்விழியாப் பிணம்வைத்துக் காப்ப துண்டோ? செய்யதிரு வடிபணிந்து போற்றி இந்தச் செய்தியினைத் தெரிவிக்க வந்தேன்..." (39) என்கின்றாள். இதனைச் செவிமடுத்த புத்தர்பிரான் அப் பெருமாட்டியை, மங்கைமனத் தெளிவையெலாம் உரைத்த உண்மை வார்த்தையினால் அறிந்தவளை நோக்கி, 'அம்மா! எங்குமிலாப் பொருள்தேடச் சென்று நீயும் யான்நினைத்த பொருளதனைப் பெற்று வந்தாய்; தங்குமிந்த உலகியற்கை மாறா தம்மா! தனயனைநீ எண்ணிமனம் தளர வேண்டா; அங்கமெலாம் வாயாக அழுதிட் டாலும் அவளெழுந்து நின்துயரம் அகற்ற லுண்டோ? (40) என்று தேற்றி மகனை அடக்கம் செய்துமாறு பணித்து தன் வழிச் செல்லுகின்றார். போதி மரத்தடியில் என் மனைவி யுடன் நின்றிருந்த எனக்கு இந்த மானதக் காட்சிகள் படலம் படலமாக மனக் கண்ணில் புலனாயின. இத்துடன் இந்த இயல் நிறைவு பெறுகின்றது.