பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 73 + தமிழுக்கு ஆக்கம் அளித்துள்ளார். இவருக்கு இசைஞான மும், இசைப் பயிற்சியும் உண்டு. அவரே தம் பாடலுக்கு மெட்டு, இராகம் தாளம் முதலிய இசைக் குறிப்புகளைத் தம் பாடல்கட்குத் தந்திருப்பதை அறியலாம். இந்த நிலையில் தமிழிசை இயக்கத்தின் அலைகள் திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்து வந்த கவிமணியின் உள்ளத்திலும் மோதின. அக்காலந்தொட்டு பற்பல கீர்த்த னங்களும் இவர் பாடி வந்துள்ளார். பெரும்பாலும் இவை தெய்வம் பற்றியனவாகவே உள்ளன. இசையரசு முத்து தாண்டவர் பதங்கள் முதலியவற்றிலே காணப்பெறும் நயமும் அபிநயத் தகுதியும் இவர்தம் கீர்த்தனங்களில் மிளிர்கின்றன. பல்லவி சொன்ன தெல்லாம் மறந்தாரோ? - என்னைச் சோதனை செய்யத் துணிந்தாரோ? அதுபல்லவி செந்நெற் கழனிசூழும் தில்லை பதியாரன்று கன்னல் கனியமுத்தம் கனிந்து தனித்தளித்துச் (சொன்ன) சரனம் வருவார் வருவாரென்று நித்தம் வரும் வழிமேல் விழியாய் நின்றேன் தோழி ஒரு வாரம் ஒருமாதம் ஒருவருஷமும் போச்சே ஒருத்தி சிறுக்கி என்றிவ் ஆரும் சிரிக்கலாச்சே (சொன்ன) இதுபோன்ற கவிதைகள் அமைந்த கீர்த்தனங்களும் பல உள்ளன. எட்டயபுரத்தில் பாரதி மண்டபம் நிறுவப்பெற்ற பொழுது பாடிய கீர்த்தனம் ஒன்று உள்ளது. அது: