பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

கவிஞன்
நான் பேசுகிறேன்

'என் காவியங்களே என் வாழ்க்கை.
என் வாழ்க்கையே என் எழுத்து
என்னைப் பற்றிச் சொல்வதற்கு
என் இலக்கியங்கள் உயிர்வாழ்தல் மட்டுமே!”

இதற்கு மேலும் என்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது, என்ன இருக்க முடியும்?

உடல், உயிர், உள்ளம் இம்மூன்றும் வாழ்வின், உன்னதமான குறிக்கோளை வாழ்வாகக் கொண்டு, உண்மையைப் பின்பற்றி வாழ்ந்தாக வேண்டும் என்பதைத் தவிர?

கவி. கலீல் கிப்ரான் ஒரு உண்மையான ஆற்றல் சால் பெருங்கவிஞன். கவிதா உலகில் அவன் என்றென்றும் ஒளிவீசும் நிறைமதி போன்றவன். இவ்வுலகில் நின்று நிலவும் எல்லா மொழிகளிலும், அவனுடைய குரல் ஓங்கி ஒலித்து, மந்திரச் சொற்களாய் புகுந்து, மக்களின் உள்ளங்களைச் செப்பனிடச் செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த அளவே விரும்பவும் செய்கிறேன். அவரது இறுதி நாட்களில் அந்தக் கவியகம் பீரிட்டு வெளிபடுத்திய ஆழமான குரல்...!

ஓ...! என் மரணமே! வா...! வந்தென்னை தழுவிக் கொள். என் உயிர் உன் வருகையை எதிர்பார்த்து ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது வா... வா...! விரைந்து வந்து இந்தச் சடப் பொருள்களின் வலிய பிடியிலிருந்து என்னை விடுவித்து விடு! ஏனெனில் நானிங்கு ஒரு தேவ தூதனாக வந்தேன். தேவ மொழியில் உரையாடினேன். என் அர்த்தமுள்ள அற்புதமான மொழி இவர்களுக்குப்

07