பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழறிவைத் தந்து சிறப்பித்தது. அக்கல்லூரியில் நிகழும் அறிஞர் பெருமக்களின் உரைகள், அப்போது நிகழ்ந்த உரையாடல்கள் கவிஞரின் உள்ளத்தில் ஆழ்ந்த மொழிப் பற்றையும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன. முடியரசன் தமது 21-ஆம் வயதில் எழுதிய, சாதி என்பது நமக்கு ஏனோ?’ என்ற கவிதையே அவரது முதல் கவிதையாகும். இது திராவிட நாடு’ இதழில், பெரியகுளம் துரைராசு என்ற பெயரில் வெளியாயிற்று. 1940-ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தில் தொடர்பு கொண்டார். இ த் .ெ த | ட ர் பு அவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்த போதிலும் 1943-ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்வியுறவில்லை; தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். இடையிலே நவாபு டி. எசு. இராசமாணிக்கம் நாடகக் குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது, சென்றார். அங்கிருந்த சிறைவாழ்க்கையும் மதவழிபாட்டு முறைகளும் வெறுப்பை விளைத் தன. எனவே போன சுவடு அழியு முன்னரே தி ரு ம் பி வந்துவிட்டார். பின்னர்த் தம்மைத் தோல்வியுறச் செய்தவர்களைத் தோற்கடிப்பதற்காகத் "தலைமறைவாக இருந்து படித்து 1947-இல் வித்துவான் பட்டம் பெற்றார். 1947-1949 வரையிலான இரண்டாண்டுக் காலம் சென்னை முத்தியாலு ப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டுமன்றி, திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்றதாக இருந்தது. போர்வாள், கதிரவன், குயில், முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதை களையும் , கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது