பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 川c 3 あぶSン (தில்ல்ை பக்க காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் , கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன், தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன், மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கன்னத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பிாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வரன். - முடியரசன்