பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் உண்டா : வானொலியில் இசையரங்கில் தமிழ்தான் உண்டா? வளங்கொழிக்கும் நிழற்படத்தின் பேச்சில் பாட்டில் தேனமிழ்தத் தமிழுண்டா? பழிக்கக் கண்டோம்; தெளிவின்றி ஒன்றிரண்டு தமிழைச் சொல்லும்; ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா? எடுத்துரைப்பார்க்(கு) அத்துறையில் இடமே வில்லை! கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப்ப உங்கள் (9) வாழ்த்தொலிகள் மிகுகின்ற திரும ணத்தில் வடமொழியாம் செத்தமொழி சுமந்து செல்லும் காழ்ப்புமிகும் மொழிப்பகைவர் புலம்பல் நன்றோ? கண்கெட்டுத் திரிவதுவோ? வேற்றி னத்தைத் தாழ்த்துகிறேன் எனக்கருதேல்; அவ்வி னத்தார் தமிழ்த்தலைவர் தலைமைகொள மனங்கொள் வாரோ? தாழ்த்துவது நாமல்லேம்; நம்மி னத்தைத் தாழ்த்துகிறார்; தாழ்வதுவோ தமிழ வாழ்வு? (10) செய்தித்தாள் நடத்திவரும் திருக்கூட் டத்தார் செய்துவரும் மொழிக்கொலையை நினைத்தால் நெஞ்சம் வெய்துயிர்த்துச் சாவதன்றி வழியே யில்லை; வேண்டுமெனக் கொலைசெய்யும் இதழ்கள் தம்மைக் கொய்தெறிய மன மின்றி நாமே காசு கொடுத்தவற்றை வளர்க்கின்றோம்; துணிந்தெ ழுந்து செய்ய தமிழ் இதழ்நடத்த வருவோர்க் காணின் சிரித்தொதுக்கி விடுவதுவோ தமிழ வாழ்வு? (11) --- கான் நின்ற - காட்டில் நின்ற காழ்ப்பு - முற்றிய வெய்துயிர்த்து - பெருமூச்சு விட்டு