பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளுடைய பொழுதிற்ருன் வந்து சூழ்ந்து போற்றுகிற உறவுமுறை வளர்ந்து காணும்; பொருளிலேயேல் ஒருபொருட்டாய் மதியா தன்றிப் புன்மொழிகள் புகலுதற்கும் அஞ்சா தந்தோ! பொருளுளதேல் சாப்பாட்டுக் கூட்டம்; கெட்டுப் போய்விடினுே கூப்பாட்டுக் கூட்டம் என்ற பொருளுரையைக் காட்டுகிற உறவை நம்பிப் புவி தன்னில் வாழ்வதுதான் நன்ருே சொல்வீர்! )iO ۳ارے( இப்புவியில் என் உறவின் முறைதான் சொன்னேன் ஈண்டுள்ளோர் நல்லவர்கள் குறளிற் கூறும் ஒப்புரவு தெரிந்தவர்கள்; திருக்கு றட்கே உயர்வுதரத் தேனப்பன் என்னும் நண்பன் செப்பரிய முயற்சியினுல் இங்குக் கண்ட திருக்குறளின் கழகத்தில் உறவு கொண்டோர் ; நற்குடும்ப நெறியறிந்து வாழும் சான்ருேர் நலமனைத்தும் பெற்றிங்கு வாழ்க! வாழ்க! (க.க) 114