பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணில் அடங்கா இளம்வாழை பெற்றதுண்டு ; நண்ணி வளர்வாழைத் தோட்டத்துள் நாளுெருவன் வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டத்துள் ஏழையேன் நிற்க இடம் தந்த என் தமிழ்த்தாய் வாழ்கஎன வாழ்த்தி வணங்குகிறேன் ; என்குலமும் வாழ்கஎன வாழ்த்துகிறேன் வாழ்க கனியனைத்தும் ; கவிக்கனி பாவல்ல வாழை பழுத்தகனி துய்ப்போர்க்கு நாவெல்லாம் இன்சுவையாம் நாளெல்லாம் நற்சுவையாம் சொல்ல இனிக்கும் சுவைக்க இனித்திருக்கும் மெல்ல நினைக்க மிக இனிக்கும் மீண்டினிக்கும் கேட்கச் செவியினிக்கும் நாடோறும் கேட்பதற்கு வேட்கும் படியினிக்கும் வேண்டும் பொழுதினிக்கும் இன்றினிக்கும் நாளைக் கினித்திருக்கும் இக்கனியே என்றும் இனிக்கும் இதனினிப்புக் கொப்புண்டோ ? உண்ண மிக இனிக்கும் உண்டால் தெவிட்டாது ; வண்ணம் கனிந்திருக்கும் வடிவம் அழு காது ; பாரதி வாழை பாரதியாம் இவ்வாழை பாக்கனிகள் உண்பிக்கப் பாரறிய எட்டைப் பதிமண்ணில் தோன்றியது மண்ணின் வளத்தால் மறமிக்க காவலரால் உண்ணுநன் னிரால் உரமாய் வளருங்கால் சென்னை நகர்க்குச் சிலர் கொண்டு சென்ருர்கள் நன்னிரா வார்த்தார்கள்? நாளும் திருக்கூவப் புன்னிரால் பூசை புரிந்தார்கள்; ஆனலும் முன்னிர்மை போகவில்லை மும்மடங்காய்க் கண்டதல்ை 125