பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சி தலைவர்: புரட்சிக்கவிஞர்-திரு-பாரதிதாசனர்; இடம்: புதுக்கோட்டைத் திருக்குறட் கழகத் தலைவர் அண்ணல் சுப்பிரமணியனுர் மணிவிழா. நாள்: 19-10-1958. தாமரை, ஆம்பல், குவளை, எள்ளுப்பூ, மகிழம்பூ, முல்லை, அரவிந்தமொட்டு, செங்காந்தள் முதலிய மலர்கள் தலைவி யின் உறுப்புக்களுக்கும் அவள் மென்மைக்கும் உடல்மணத் திற்கும் கூறப்பட்டன. மின்காட்டும் - மின்னலைப்போன்ற; மேனுட்டின் - வானுலகத்தின்; பேதுற்றேன் - மயங்கினேன்; வெற்பு - மலை; நீவி - தடவி; பொன்னகை - புன்முறுவல்; இதைப் பொன்னகை எனக் கூறியதற்கேற்ப இதழ் (உதடு) கதவு என உருவகம் செய்யப்பட்டது. நண்பன் அழகப்பன்புதுக்கோட்டை அழகப்பா நிழற்பட நிலைய'த்தின் உரிமை யாளரும் கெழுதகை நண்பரும் ஆ ெய சுப. அழகப்பன். ஏனல் புனம் - தினைப்புனம்; மறி மான் குட்டி; கொடிபடர்ந்த சந்தனமரத்தைக் காட்டியது, தலைவனும் தலைவியும் அவ்வாறு பிணைந்திருக்க வேண்டும் என்ற குறிப்பை யுணர்த்த, --- தாமரையை விட்டுவிட்டுக் குவளைக்கு ஓடிவரும் வண் டைக் காட்டியது, தம் துனேவியரைவிட்டு மற்ருெருத்திபால் ஒடும் ஆடவர் செயலைச் சுட்டுவதற்காக. தொண்டகம் - குறிஞ்சி நிலத்துக்குரியபறை. எனக்கும் ஓர் அதியன் புதுக்கோட்டைத் திருக்குறட் கழகத்தலைவர், அண் ண ல் சுப்பிரமணியனுர் மணிவிழாவில் அவரை வாழ்த்திப் பாடப்பட்டது. நாள்: 19-10-1958. 145