பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வளமுற கலிவெண்பா உணவுதனைப் பற்றி உயர் கவிதை யாக்கக் கனவுலகிற் சென்றேன் கடும்பசியோ என் வயிற்றில் ஆடித் திரிந்துழல ஐயையோ என் புலமை ஒடித் தறிகெட் டொருசொல் வரக்காணேன் ; s பாழ்பசி வந்துவிடின் பத்தும் பறந்துபோம் சூழ்நிலையை இன்றுணர்ந்தேன் துாய மனத்தெளிவும் பொங்கும் கவியுணர்வும் பூரிக்கும் நன்மகிழ்வும் தங்குமோ இவ்வுலகில் சாரும் உணவின்றேல் ? அன்பேது ? நெஞ்சில் நிறைவே(து) ? அறிவமைதி என்பதுதான் ஏதேது ? வாழ்க்கை வளமெய்த உண்டியொன்றே வேண்டுவ(து) ; உண்மையி தென்பதனைக் கண்டுணர்ந்தேன் ஆதலினல் கால்வயிறே னும் நிரப்பிச் செய்யுள் புனேவமென ச் சிந்தித்துச் சேயிழாய் ! உய்யும் வகையுண்டோ உண்டி சிறிதுண் டோ ? ?? என்றேன் ; செவியேற்ற ஏந்திழையாள் ஓடிவந்து * சென்ற முதல்நாளிற் செய்தபடி செய்தேன் ’’ 24