பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தன் பகர்ந்ததற்பின் சான்றின்னும் வேண்டுவதோ ? ஏத்துங் கலையுணர்(வு) எங்கே உணவின்றேல் ? செய்யுளெழ வில்லை; செயலின்றி நானிருந்தேன்; பையவந் தென்துணைவி 'பூசைப் பணியாற்ற எல்லாம் அமைத்தேன் எழுகவெனச் சொல்லியதும் " நல்லாய் ! பசியால் நலிவெய்தும் போது கடவுள் உணர்வகத்தில் காணல் எளி தாமோ ? மடமை தொலைத்துயர்த்தும் மாண்புள்ள கல்வி பயில் என்ருல் பையன் பசி என்று தேம்பி அயர்கின் ருன் ஆதலினுல் கல்வி அறிவேது ? துாய அறமேது தொல்லே பெருகலன்றி ? ஆய கலையே(து) அறியாமை சூழலன்றி ? நாட்டிற் பசியிருந்தால் நல்லனவே தோன்ரு என் lட்டி உணவூட்டல் ஏற்ற அறமென்று வாழ்வுதனை அப்பணிக்கே வைத்த மணிமேகலைசொல் நாளும் நினைவிருத்தி நாம்வாழ வேண்டும்; இரந்துமுயிர் வாழும் இழிநிலையை நீக்கப் பரந்துதொண்டு செய்வதற்குப் பக்குவமும் வேண்டும்; அறிவு வளர்ந்தால் அடிமைமனம் மாயும்; அறிவு வளர எனில் அப்பசியை மாய்க்கத் திறம்வேண்டும்; ஏர்த்தொழிலைத் தேய்க்காமல் காக்கும் உரம் வேண்டும்; அத்தொழிலோர் உள்ளத்தில் இன்பொன்றே நிற்கச் செயல் வேண்டும் நேரிழையே + or என்றுரைத்தேன்; நிற்கட்டும் சொற்பொழிவு !! நேற்றுரைத்த சொல்லுக்கு மாற்றம் உரைக்கின்றீர் மாண்ட நல்ல சங்கத்தார் சோற்றுக் கவலையில்ை சொல்லிய நற் பாட்டுக்கள் நன்றுநன் றென்றீரே நானெதைத்தான் நம்புவது?’’ என்றுரைத்தாள்; 'பேதாய் ! எடுத்துரைப்பேன்; சோறின்றிப் 26