பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாக்கில் : o - எண்சீர் விருத்தம் அகத்துக் கண் மாசிலராய் இன்னுச் சொற்கள் அழுக்காறு வெகுளி அவா. நான்கும் நீக்கித் தொகுக்கின்ற செல்வத்தால் ஈத்து வந்து தொண்டொன்றே பேணிவரும் தலைவ ரேறே ! மிகப்பழைய தமிழ்காக்க அறப்போர் ஆற்றும் வேங்கை எனும் கவிமணிகாள் ! அரங்கம் காணத் தொகுப்பாக இவண் வந்தீர்! தமிழ வேளே ! தொழுதெனது கவிதைகளைப் பாடு கின்றேன் (க) வேண்டும் நட்பு வளர்பிறையின் இயல்பினதாய், புலமை சான்ருேன் வகுத்துரைத்த நூல்நயம்போல் இனிமைத் தாகித் தளர்நிலையில் உடுக்கை இழந் தவன்கை போலத் தானே வந் துதவுவதாய், அகம்ம லர்ந்து வளருவதாய், மிகுதிக்கண் இடித்து ரைத்து வாழ்வுதரும் பண்பினதாய், நற்கு ணத்தின் விளைநிலமாய்ப் பழி நானு கின்ற நட்பே விழைகஎன வள்ளுவப்பே ராசான் சொன்னன் )ه-( 34