பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பிறந்தது வனவிலங்கை ஓர் நாள் வளர்நெருப்பிற் சுடுங்கால அனல் சிறிது தாக்கியதால் ஆஊ என்’றலறிவிட்டான் உள்ளத் துடிப்பை உணர்த்தும் ஒலிக்குறிப்பைத் தெள்ளத் தெளிந்துணர்ந்தான் தீசுட்ட அந்நாளில் ; பக்கத்துக் காடுறைவோன் பல நாள் வருதலிலான் புக்கான் ஒருநாள் புது மனிதன் வரவுணர்ந்து உள்ளத் தெழு.மகிழ்ச்சி உந்தத் தலையசைத்து மெள்ளத் தன் வாயிதழை வா வென் றசைத்துவிட்டான்; மற்ருெருநாள் வேருெருவன் மனம் வருந்தச் செயல்செய்தான் உற்றெழுந்த சீற்றம் உந்துதலால் உள்ளுணர்ச்சி சுற்றிச் சுழன்று சூடேறிப் போ வெனுஞ்சொல் பட்டுத் தெறித்தது காண் பதறும் அவனுதட்டில் ; இவ்வண்ணம் ஒரெழுத்தால் இயலும் மொழி கண்டான் செவ்வியநன் மொழி என்று செப்பும் முறையாகத் தொகைவகையாய் விரிவினதாய்த் தொல்பழமைக் காலத்தே வகைசெய்தான்; அம்மொழியே வளர் தமிழாய்க் காண்கின்ருேம். தமிழ் காட்டும் உலகம் தனிமுதலாம் அந்தத் தமிழ் காட்டும் நல்லுலகு துணிமிகுத்த நாடெல்லாம் தொழுதேத்தும் வழிகாட்டி ; யாதும் நம் ஊரேயாம் யாவரும் நம் கேளிரென்ற தீதில்லா இவ்வுலகைத் தெளித மிழே காட்டிற்றுப் போருலக வெறியர்க்குப் புத்திவர நெறிகாட்டி ஒருலக வழிகாட்டும் உயர் மொழிதான் எங்கள் தமிழ் என்னும்போ துடல் சிலிர்க்கும் எலும்பெல்லாம் நெக்குருகுபு உன்னும் உளங்குதிக்கும் உடலெல்லாம் தான்குதிக்கும் 42