பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றற்குத் தகுநூல்கள் கசடு நீக்கிக்
கற்றுப்பின் அவைசொல்லும் வழியில் நின்று
முற்றுமுணர் அறிவினராய் வாழ்ந்து காட்டி
முதற்புலவன் வள்ளுவன்செய் குறள் நூலுக்குத்
தெற்றெனுமா றுரையெழுதிக் காட்டி அந்தத்
திருநெறியில் எவ்வண்ணம் நின்றார் என்ற
பெற்றியையான் ஓரளவு தெரிந்த வண்ணம்
பாடுகிறேன் பிழையுளதேல் பொறுத்தல் வேண்டும் ( )

கடவுட் கொள்கை
ஒருநூறு சமயங்கள் படைத்துக் காட்டி
உட்கிளைத்த சமயங்கள் பலவும் கூட்டிப்
பெருமைசொலி அத்தனைக்கும் தெய்வங் கண்டு,
பெண்பார்த்து மணமுடித்துப் பிள்ளைப் பேறும்
உருவாக்கி, ஒருசிலரை இரண்டாந் தாரத்
துட்படுத்திப் பிறர் மனையை நாட வைத்துச்
சிறுவர்விளை யாடலென ஆடி விட்டுச்
செம்மைநெறி காணுமல் திகைத்து நின்றோம் ( )

இருள்சேர இவ்வண்ணம் திகைக்குங் காலே
எழுந்ததுவோர் செம்பரிதி உலகுக் கெல்லாம்
மருள்போக ஒளிதந்து கடவுட் பாங்கை
மறுவறநன் குணர்த்திற்று ; செம்மை கண்டோம்;
திருவுடைய வள்ளுவனாம் பரிதி காட்டும்
திருநெறியே திரு.வி.க. வேண்டி நின்றார்
திருநீறு பொலிநெற்றி உடையா ரேனும்
தெய்வநெறி பொதுநெறியே கூறி வந்தார் (ரு)

46