பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுயிர்க்கும் அருளாளன் வாடு பயிர் கானுங் கால் வாடி னேனென் றுளங்கனிய வாய்மொழிந்தார் வடலூர் வள்ளல் ; ஆடு மலர்க் கொடிகண்ட மற்ருேர் வள்ளல் அதுபடரத் தேர் தந்து படர்து டைத் தான் ; சா டுபுயல் வீசுகையில் நமது வள்ளல் தான் வளர்த்த செடிகளெலாம் வீழக் கண்டு வாடியதை நாமுணர்வோம் ; எவ்வு யிர்க்கும் வள்ளலென் போர் இரங்கியருள் செய்வர் போலும் (0அ) வள்ளல்களை வென்ருர் பாரிவிடும் தேர தல்ை வாழ்வு பெற்ற _படர்முல்லைக் கொடி ஒன்றே; செல்வம் எல்லாம்) வாரிவிடும் அழகப்பன் தந்த வீட்டால் வாழ்வுபெறும் பூங்கொடிகள் கணக்கில் உண்டோ? சோரி விடத் தலைதந்தான் குமணன் என்பர் ; சொல்லரிய பொருளெல்லாம் கல்விக் காக மாரி படத் தந்ததன் மேல் வாழ்வே தந்தான் மனமுள்ளோர். இவன் கொடையின் அருமை காண்பர் (Dக) படுபெயலால் மிக நனைந்து குளிரால் வாடிப் பதைபதைத்து நடுநடுங்கக் கண்டு, நெஞ்சு -- துடிதுடித்தே அடடா ஓ ! என்று பேகன் துய்ய மயில் ஒன்றுக்கே ஈந்தான் போர்வை ; கொடையழகன் பல மயில் கள் கற்ப தற்குக் குடியிருக்கும் தன் வீட்டை ஈந்தான் கண்டோம் ; கொடைமடத்தால். உளம்பெரிது பேக னுக்கு, கொடுப்பதிலே உரம்பெரிதே அழகனுக்கு (உ)ை 61