பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசென்ருல் சுற்றும் மரமென் பார் தாமும் அரசு செலுத்துதற் காகா ரே ! உண்மைக் குடியரசின் நற்பொருளைக் கூர்த்துணர்ந்தார் நல்ல படியரசை ஆளப் பயன்படுவர் மாமயிலே ! அறிஞர் கடமை ஆதலினல் அவ்வறிஞர் ஆசை பதவி எனும் போதைகளில் சிக்குண்டு போகாமல் அஞ் சாமல் பாழும் அடிமைப் பழிசுமந்து தந்நலமே வாழும் முறையா லே வால் பிடித்து வாழாமல் நாட்டு நலங்கருதி நா வீறு மிக்குயர்ந்து கேட்டுச் செயலொழித்துக் கீழ்மைக் குண மொழித்துச் சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனையில் காண்பவற்றை முந்திப் படைத் தரசை முன்னேற்ற வேண்டுமடி ! அன்றே புதுவுலகம் ! அவ்வுலகில் நாமரசர் ! என்றேன் ; அறிஞரிலே அத்தகையார் உள்ளனரோ ? ?? என்னுமோர் ஐயம் எழுப்பினள் என்மனயாள் ; இன்னும் இருக்கின் ருர் எத்துணையோ பேரென்றே ; அவர் யார் ? ஒரிருவர் சொல்லுங்கள் அத்தான் ! எனவுரைத் தாள் ; யாரென நான் இங்குரைத்தல் நன்றன்று மற்ருெருநாள் அப்பெயரைச் சொல்கின்றேன் என்றேன் ; முகஞ்சுழித்துத் " தப்பென்ன ? சொல் கென் ருள் ; சத்தமின்றிக் காதருகே பேர்சொன்னேன் ; மாமழையின் பேரருளால் என்விட்டில் நீர்சொட்டக் கண்விழித்தேன் நேற்று. 68