பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(154 - அன்புள்ள பாண்டியனுக்கு... வுறுப்புகள் ஒன்றிரண்டு குறைவு படினும் குற்றமில்லை; அன்பு பெற்றவனாக விளங்கினால் அவன், முழுமை பெற்ற வனாகவே கருதப் படு வான். அன் பில் லான் குறையா வுறுப்பினனாயினும், குறைவுடையானாகவே உலகினரால் எண்ணப்படுவான். ஆதலின், நீ முழுமை பெற்றவனாக விளங்க, உன் வாழ்வு சிறந்து செழித்து வளர சமுதாயத்திற் கூடி வாழ, தன் ன ல மற்றுப் பொதுநலம் பேண அன்புடையவனாக வாழ வேண்டும். "அன்பின் வழிய துயிர்நிலை; அஃதி லார்க் கென்பு தோல் போர்த்த வுடம்பு”. இங்ங்னம், அறிவுடை நம்பி