உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்து. பிற துறையில் எவ்வளவுதான் மேம்பாடுற்றிருப்பினும், அவற்றையெல்லாம் உயர்த்திக் காட்டும் ஒழுக்கத்தைப் பற்றி இக்கடிதத்தில் எழுதுகிறேன். ஒருவன் பல நூல்களைக் கற்றிருப்பினும், பல பட்டங்களைப் பெற்றிருப்பினும் உயர்ந்தோர் ஒழு கிய நெறிகளைக் கல்லாதவனாக இருப்பின் அவன் அறிவில்லா தவனாகவே கருதப்படுவான். கல்வியின் பயன் அறிவாகும்; அறிவின் பயன் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கம் இல்லை யாயின் அறிவில்லை; அறிவில்லையாயின் கல்வியில்லை. ஆதலின் அவன், அறிவிலியாகவே கருதப்படுவான். ஒழுக்க நெறிகளைக் கற்றலாவது, அவற்றை இடைவிடாது பழக் கத்திற் கொணர்தலாகும். அற நூல்கள் கூறும் நெறிகளிலும், சான்றோர் ஒழுகிய நெறிகளிலும் இக் காலத்திற்குப் பொருந்தாதனவற்றை நீக்கிப் புதிய நெறிகளிற் பொருந் துவன கொண்டு நடத்தலே ஒழுக்கம் எனப்படும்.