உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... o _- ========است இவ்வாறு மகிழ்வதுடன் வேறு வகையாலும் நான் களிப்படைகிறேன். உலகில் பெற்றோர்க் குச் சில கடமைகளுண்டு; பிள்ளைகட்கும் சில க்டமைகளுண்டு. தம் மகனைச் சான்றோனாக்குதலும், அவனை அவையத்து முந்தியிருக்கச் செய்தலும் பெற்றோர்க்குரிய கடமையாகும். அவ்வாறு சான்றோ னாக கிய பெற்றோர்க்கு, மகன் ஆற்றவேண்டிய நன்றிக் கடனும் உண்டு. இவனை மகனாகப் பெற இவன் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ ! என உலகோர் வியந்துரைக்கும் வண்ணம் அவன் நடந்துகொள்ள வேண்டும் அதுதான் பெற்றோர்க்கு அவன் செய்ய வேண்டிய கடமையாகும்; உதவியும் ஆகும். அந்த வகையில் நீ நடந்து கொண்டு வருகிறாய்; கல்வியிலும் சொல்வன்மையிலும் சிறந்து விளங்கி, ஊர் மெச் சுமாறு நடந்து, மகன் பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவரு கிறாய் என்பதையறிந்து களிப்படைகிறேன். இவ்வாறு, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் பி காடுத்த உனக்கு ச் சொல் வன் மை யைப் பற்றிச் சில குருத்துகளை எழுதலா மென்று கருதுகின்றேன். அக்கருத் து கள் உன் பேச்சுக்கலை வளர்வதற்குத் துணை செய்யும் என்ற ஆர்வத்தால் எழுதுகின்றேன். சொல்வன்மையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது. நாவலர் பெருமானாகிய திருவள்ளுவர், நாநலம்’ என்று கட்டுகின்றார். உலகிலுள்ள பிற நலம் எல்லாவற்றையும் விட இந் நாநலம் மிக்க சிறப்புடைய தென்றுங் கூறுகின்றார். இஃது உலகத்தையே தன்வயப்