பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் - முடியரசன் o யவை எவை, அடுத்துக் கூறவேண்டியவை எவை, இறுதியிற் கூறவேண்டியவை எவை என்று எண்ணிப் பார்த்து, அவற்றை நிரல்படக் கோத்து வைத்து, அம்முறைப்படி சொல்லுகின்றனர். முறைப்படுத்திச் சொல்லும் பொழுதும் கேட்டார்க்கு இன்பம் பயக்கும் வண்ணம் இனிதாகச் சொல்லுகின்றனர். இவ்வாறு நிரல்படக்கோத்து, இனிதாகச் சொல்லும் அறிஞர் பெருமக்களுடைய சொற்களை, கருத்துகளை உலகம் விரைந்தேற்றுக் கொள்ளுகிறது. அவர் சொல்லின்வழி உலகம் நடக்கவுஞ் செய்கிறது. இம்முறைகளையெல்லாம் அறிந்து, இடைவிடாது முயலுவையாயின் சிறந்த நாநலம் படைத்தவனாக நீ எதிர்காலத்தில் விளங்க முடியும். ஆர்வமும் உழைப்பும் இருப்பின் இத்துறையில் முன்னேற்றங் காணலாம். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குபவர் கிரேக்க நாட்டு அறிஞர் தெமாத்தனிசு (Demosthenes) என்பவராவர். இவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்பினர்; மெல்லிய குரலில் பேசுவதுதான் இவருக்கு வழக்கம்; இவர் பேசுதற்கு மேடையில் ஏறினால் அவையோர் நகைப்பர். ஆயினும் இத்துறையில் எவ்வாறேனும் வெற்றி பெற்றே தீர்வது என்னும் உறுதிப்பாட்டுடன் பெருமுயற்சியை மேற் கொண்டார். வாயில் கூழாங் கற்களை அடக்கிக்கொண்டு, கடலுக்கு முன் நின்று, கடலொலியையும் மீறி உரத்த குரலில் பேசிப் பேசிப் பழகினார். திக்குவதும் அறவே நீங்கியது. குரலும் ஓங்கியுயர்ந்தது. இறுதியில், உலகத்திற் சிறந்த