பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப்படித்ததாக எழுதியிருந்தாய். அஃது அவராலேயே எழுதப்பட்ட நூலாகும். அவரைப் போன்ற பெருமக்களுடைய வரலாற்றைப் படித்துப் பயன்பெறுவது வேண்டப்படும் ஒன்றாகும். தகுதியில்லாத, ஒரு வகையிலும் பயன்படாத, நாட்டுக்கு நன்மை தராத வாழ்க்கை வரலாறுகளை, வாழ்க்கை வரலாறு என்னும் பெயரால் வெளிவரும் காகிதக் குப்பைகளை இளைஞர் பலர் படித்துத் தம்மைத் தாமே பாழ்படுத்திக் கொள்கின்றனர். அந்த வரலாற்றுக்குரியோர் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறங்கப் போகும் நேரம், அவர்க்குத் திருமணஞ் செய்து கொள்ள விருப்பம் உண்டா இல்லையா, உண்டென்றால் யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்ற இத்தகைய வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பதால் யாது பயன்? புழுத்துப்போன அவ்வாழ்க்கைக் குறிப்புகளில் பொய்ம்மைக்