பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


SS வேதம் :

  1. ffffffff #ff

வேதம் : கவியின் கனவு கிறது. வாணி.ததியின் சுழல் வகுத்த விதிக்கு இரையாகி விடுகிறாள். வாணி, வாணி என்ற கவிஞனின் அவலக்குதல் வானமெங்கும் எதி ரொவிக்கிறது ஒடப்பாட்டு துரத்திலே பின்னணியில் கேட்கிறது: மாயா. அந்த வாணி! இனி ஆகாச வாணி ஆகிவிடுவாள். படகோட்டிகளை நான்தான் வேண்டுமென்றே போகச் சொன்னேன். ஆற்றிலே புதுவெள்ளம் சுழல் விட்டுப் பாய்கிறது. படகும் ட்டைப் படகு என் கலைமன்னனை விட்டு வாணி பிரிந்தால் அழகின் ராணியாகிய என்னை அந்தக் கவி மன்னன் விரும்பியே தீருவான். அந்தக் கவியரசனுக்காகச் சிறு வயதிலிருந்தே காத்திருந்தேன். பருவம் வந்துவிட்டது. எனக்கு இடையூறாக இதுவரை இருந்துவந்த வாணி, இனி நதிமயமாகி விடுவாள்! நானும் விதியை வென்று நிற்பேன். தனிமை, கலைகளின் விரோதி. எப்படியும் வாணியைப் பிரிந்த கவிமன்னனின் மதி, என் விதியிட்ட கட்டளைக்கு இனிப் பணிந்தே தீரும். (சிரிக்கிறாள்) ஆனால், மன்னன் விடமாட்டானே! உனக்குக் கவியின்மேல் ஆசை. புவியாளும் இளவர சனுக்கோ உன்மேல் காதல். இது எங்குப் போய் முடியுமோ? மாயா எதையும் சமாளிக்கும் வலிமை எனக்கு உண்டு. பிச்சைக்காரர்கள் எத்தனை பேர் வந்தால் என்ன? நான் வற்றாத காமதேனு - கற்பக விருட்சம் என் திருவடிகளை அர்ச்சிக்காத ஆண் களில்லை. ஆனால், கவியரசன் மட்டும் என்னைக் கண்னெடுத்தும் பார்ப்பதில்லை! அந்தக் கனவும் இனி நனவாகிவிடும். இளவரசனின் ஏவலால் அவனைக் கொண்டே அரசனைக் கொல்வேன்.