பக்கம்:கவி பாடலாம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70.

கவிபாடலாம்

மற்றொரு வகையில் சந்தம் என்னும் சொல்லைப் புலவர்கள் ஆள்வார்கள். சந்தப் பாட்டு என்பதில் வரும் சந்தம் தான, தனன, தந்த, தத்த, தைய முதலிய வாய்பாடு களில் வரும். திருப்புகழ்ப் பாடல்கள் யாவும் சந்தப் பாடல்களே,

வகையுளி என்ற இலக்கணம் பற்றி விளக்கம் தருக.

பாடல்களில் சீர்களைப் பிரிக்கும் போது சொற்கள் வெட்டுண்டால் அதை வகையுளி என்று சொல்வார்கள்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மணக்கவலை மாற்றல் அரிது.”

என்ற குறட்பாவில் சீர் பிரிக்கும்போது சொற்கள்

ஒடியாமல் முழுமையாக இருக்கின்றன. இதில் வகையுளிஇல்லை.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பை இல:

என்பதில் வேண்டுதல் வேண்டாமை-இலானடி என்று சொற்களுக்கு ஏற்பச் சீரைப் பிரித்தால் தளை பிழைபடும். ஆதலின் வேண்டாமை என்ற சொல்லை ஒடித்து முன்பகுதியோடு ஒரு பகுதியைச் சேர்த்தால்தான் தளை சரியாக வரும். ஒசையும் நன்கு அமையும்.

‘'வேண்டுதல் வேண்-டாமை-இலானடி’ என்று சீர் பிரிக்கும்போது சொல்லைப் பிளத்தல் வகையுளியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/245&oldid=655851" இலிருந்து மீள்விக்கப்பட்டது