பக்கம்:கவி பாடலாம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74.

கவி பாடலாம்

தனித்தனியே உள்ள பாக்களின் வகை வெண்பா முதலியன. கவிஞர்கள் பாடுகின்ற பாடல் தொகுதிகளின் இயல்பு நோக்கி வரும் பெயர்கள் மதுர கவி என்பன. முதலில் கவிஞர்களுக்கே அப்பெயர்கள் வந்து பின்பு பாடல் களுக்கும் வழங்கலாயினர். சொல்லினிமை பொருளினிமை மலியப் பாடுகிறவன் மதுரகவி. விரிந்த காவியங் களைப் பாடுகிறவன் வித்தாரகவி. நாகபந்தம், மடக்கு முதலிய விசித்திரங்கள் அமையப் பாடுகிறவன் சித்திர கவி. ஒரு கருத்தை ஒருவர் கூறினால் அதை வைத்து உடனுக்குடன் பாடுகிறவன் ஆசுகவி.

சதகம், யமகம், அந்தாதி ஆகியன எப்பாவின் வகையைச் சார்ந்தவை?

இவை பாவின் வகையால் அமைந்த பெயர் அல்ல. சதகம் என்றால் நூறு பாடல்கள் அடங்கியது என்று பொருள். ஆசிரிய விருத்தங்களாலும், கட்டளைக் கலித்துறையாலும் அமைந்த சதகங்கள் உண்டு.

யமகம் என்ற சொல்லுக்கு மடக்கு என்று பொருள். ஒரு பாடலின் நான்கு அடியின் முதலும் ஒரே மாதிரி வரப் பொருள் வேறுபட அமைவதை யமகம் என்பர் யமக அந்தாதிகள் பல தமிழில் உள்ளன.

அந்தாதி என்பது அந்தமும் ஆதியும் ஒன்றினது என்ற பொருளுடையது. அந்தாதித் தொடை, செய்யுளந் தாதி என்று இருவகை உண்டு. செய்யுளந்தாதி என்பது ஒரு நூலில் ஒரு செய்யுளின் ஈறே அடுத்த செய்யுளின் முதலாக அமைந்து சங்கிலி போலத் தொடர்ந்து வருவது. t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/247&oldid=655854" இலிருந்து மீள்விக்கப்பட்டது