பக்கம்:கவி பாடலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுசீர் விருத்தங்கள் 49

கொண்டோம். அறுசீரடி விருத்தங்களில் வேறு வகையும் உண்டு. இந்த விருத்தத்தின் முழுப் பெயர் அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பதை முன்பு தெரிவித் திருக்கிறேன். இது ஆசிரியப்பாவுக்கு இனமாகிய ஆசிரிய விருத்தம். இதில் உள்ள ஒவ்வோர் அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன. அதனால் அறுசீர் ஆசிரிய விருத்தம், ஐந்து சீருக்கு மேற்பட்டு எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடிக்குக் கழிநெடிலடி என்று பெயர். அதனால் இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர் பெற்றது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் பல வகை உண்டு.

“சுருதி யோசை முழவோசை

சுகங்கள் பூவைக் கரும்பொருள்கள் உரைசெ யோசை இயலிசைநீ

டோசை யுழவ. ருழவோசை பொருவி லாலை பாயோசை

பொழில்வா யலர்பாய் Dமிறோசை வரிசை மாதர் சிலம்போசை

வளைநீ ரோசை தனின்மிகுமால்.”

இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தந் தான். ஆனாலும் இதன் ஒசையும், ‘இதந்தரு மனையி னிங்கி’ என்று வரும் பாடலின் ஒசையும் வெவ்வேறு. இரண்டுக்கும் வேறுபாடு சீர் அமைப்பினால் அமைந்தது. ‘இதந்தரு மனையி னிங்கி” என்பதைப் போல வரும் விருத்தங்கள், அரையடிக்கு ஒரு விளச்சீரும் (அல்லது காய்ச் சீரும்) இரண்டு மாச்சீர்களும் அமைந்தவை. இந்தப் பாட்டைக் கவனித்துப் பாருங்கள். இதில் அரை அடிக்கு இரண்டு மாச்சீர்களும், ஒரு காய்ச் சீரும் வந்துள்ளன.

க. பா.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/50&oldid=655886" இலிருந்து மீள்விக்கப்பட்டது