உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசைத் தமிழையும் தன்னுள் கொண்டு உள்ளத்தால் மக்களிடம் நேரடித் தாக்கம் கொண்டது.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. மனித வளத்தை மேம்படுத்தி, மனித நேயத்தை வளர்க்கின்ற இலக்கியப் படைப்புகள் நிறைந்தது தமிழ், நன்மை பயப்பனவற்றைத் தன் மக்களுக்குத் தந்திடும் காரணத்தால் ஒரு நாட்டை நன்னாடு எனக் கூறுகிறோம். அதுபோலப் படைப்பாளி இலக்கியம் என்னும் நன்மையினைப் பயக்கின்றான்.

2: 2 கையெழுத்து இதழ்களின் இலக்கியப்பணி

கட்டுரையில் விவரிக்கப்ட்ட கையெழுத்து இதழ்கள் தங்களின் பங்கிற்கு இலக்கியப்பணி ஆற்றின. இவ்விதழ்களில் இலக்கியப் படைப்புகளாகக் கவிதைகள். நூல் விமர்சனங்கள். திரை விமர்சனக் கதைகள். ஆன்மீக எழுப்பல். அரசியல் திறனாய்வு. கொள்கை முழக்கம் ஆகியன வெளிவந்தன.

2: 3 தமிழில் கையெழுத்து இதழ்கள்

தமிழில் முதல் கையெழுத்து இதழ் கி. பி. 1870களில் இலங்கையில் தொடங்கியது. ஒரு நூற்றாண்டு வரை கையெழுத்து இதழ்கள் ஆர்வத்தின் வெளிப்பாடாகவும். இலக்கியம் படைக்க வேண்டும் என்ற வேகத்தாலும் கொண்டுவரப்பட்டன.

கையால் தாளில் ஒன்று அல்லது இரண்டு பிரதிகள் மட்டுமே எழுதப்பட்டு நெருங்கிய நட்பு உள்ளங்களிடம் தனிச் சுற்றுக்கு Private Circulation மட்டும் விடப்பட்டவை கையெழுத்து இதழ்கள் ஆகும். இனங்கள் தமிழன்பர்களின் இலக்கிய வேட்கைக்கு ஊற்றுக்களாக விளங்கி இலக்கியத் தாகத்திற்கு வெளிப்படையாக அமைந்தன. இதன் நிலைக்களனாகத் தமிழ்ச் சமுதாயத்தின் தமிழ் உணர்வுமிக்க தமிழர்கள் விளங்கினர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும், தமிழகத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகத்திலும், தமிழர் வாழும் வெளி மாநிலங்களிலும். வெளி நாட்டிலும் கையெழுத்து இதழின் பிரதிகளின் இலக்கிய உலா நடந்தது. 1977 முதல் 1997 வரை பங்களிப்புச் செய்தவற்றில் 60 இதழ்களின் கண்ணோட்டமே இவ்ஆய்வு.

தரமான இலக்கிய முயற்சிக்கு வடிவம். அமைப்பு என்கிற வரையறைகள் முதன்மை அல்ல: ஆர்வமும், ஊக்கமும். தொடர் முயற்சியும் முக்கியம் எனப் பறைசாற்றியவாறு கையெழுத்து இதழ்கள் புதிய வீச்சாகத் தமிழகத்தில் பவனி வந்தன.

இக்கால கட்டத்தில் கையெழுத்து இதழ்கள் முழுவதும் கையெழுத்து இதழாகவும். தட்டச்சு செய்யப்பட்ட இதழாகவும், கையால் எழுதப்பெற்று சுருள் அச்சுப் பிரதிகளாகவும். நகல் அச்சுப் பிரதிகளாகவும் வெளிவந்துள்ளன. கையெழுத்துப் பிரதிகள் கையெழுத்துப்பிரதி இதழாகவே நிலைபெற்றவையும் உண்டு. Bonum) வெளிப்பாடான அச்சு இயந்திரம் ஏறிய இதழாகவும் சில கையெழுத்து இதழ்கள் வெளிவந்தன. இவ்வகை வெளியீடுகள் சில நின்று போனதும் உண்டு.

படைப்பிலக்கியத்தில் உச்ச உயரிய (Sumuபற்றவையும் உண்டு.

186

காகிதச்சுவடி ஆய்வுகள்