உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2 : 7 சிறப்புக் கையெழுத்து இதழ்கள்

இதில் கையெழுத்து இதழ்கள் அஞ்சலக ஊடகத்தின் வாயிலாகவும் வெளிவந்தது. அவ்வாறு வெளிவந்த கையெழுத்து இதழ்கள் விருதும் பெற்றுள்ளன. அஞ்சல் அட்டை (Post - Card) மற்றும் அஞ்சலக உள்ளூர்க் கடிதம் (Inland Letter) என்கிற ஊடகத்தின் மீது கையால் எழுதப்பட்டும் கையெழுத்து இதழ்கள் விருதுகள் வழங்கப் பெற்றுச் சிறப்பையும் பெற்றன.

2 : 8 தமிழில் அச்சு

கி.பி. 1498இல் வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கள்ளிக் கோட்டைக்கு வந்தார்.கி.பி. 1550இல் அம்பலக் காட்டில் திருச்சபை அமைக்கப்பட்டது. அங்கு பயன்படுத்த கி.பி. 1584இல் இலிச்பனில் (போர்ச்சுகல்) 'கார்த்தில்யா' (சிற்றேடு) என்ற 38 பக்கத் தமிழ் நூல் அச்சாயிற்று. தமிழ் அச்சேறிய முதல் நூல் இதுதான். ஆனால் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை) 'அம்மா' என்பதை (AMMA) - என்ற உரோமன் எழுத்துக்களில் அச்சிட்டார்கள்.

இந்தியாவில் முதல் அச்சகம் கி. பி. 1556இல் கோவாவில் அமைந்தது. கி. பி. 1557இல் 'தம்பிரான் வணக்கம்' என்ற தமிழ் நூல் கோவாவில் அச்சாயிற்று.

கி.பி. 1577இல் கொல்லத்துக்கு ஓர் அச்சகம் வந்தது. கி. பி. 1578இல் மீண்டும் தம்பிரான் வணக்கம் அச்சாயிற்று. பின்பு அச்சகம் கொச்சிக்கு மாற்றப்பட்டது. இங்கு கி.பி. 1578இல் மீண்டும் கிரீசித்தியானி வணக்கம்' என்ற பெயரில் 'தம்பிரான் வணக்கம் அச்சானது

'மாசத்தினச் சரிதை' என்ற தமிழ் இதழ் கி. பி. 1812இல் வெளிவந்தது. ஞானப்

பிரகாசம் என்னும் தமிழர் இதனை நடத்தினார். இதே ஆண்டில் உலகப் பொது

மறையாம் திருக்குறள் முதன் முதலில் அச்சேறியது.

தமிழில் அச்சு இதன் பிறகு பலவிதக் கோணங்களில் வளர்ந்தது. இதனை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

முடிவுரை

இக்கட்டுரையில் ஆய்வாளர் இதுவரை கையெழுத்து இதழ்களின் தொடக்கம், வளர்ச்சி. இலக்கியப் பணி குறித்துத் தனது பார்வையை வெளியிட்டார்: மேலும் 1977 - 1997 வரையிலான கையெழுத்து இதழ்களின் பட்டியல் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சில இதழ்கள் வருமாறு:

புதுச்சேரி மாநிலத்திலிருந்து - சாப்பறை, பாரதி கர்நாடக மாநிலத்திலிருந்து வண்டு. பம்பாய் தமிழ்ச் சங்கத்தால் மலர் மணம் கொண்டு வரப்பட்டது. தலித் மக்களின் இலக்கியமாக, சீறும் சிறுத்தை, தீவட்டி ஆகியவை வெளிவந்தன. தீவட்டி. விடுதலைச் சிறுத்தை திருமாவளவனின் நேர்காணலைக் கொண்டு பரிமளித்தது. பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தால் பாரிமலர் கொண்டு வரப்பட்டது.

192

காகிதச்சுவடி ஆய்வுகள்